Friday, July 28, 2006

ஆகாயவிமானம்



ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தது யார்?


ரைட் சகோதரர்களுக்கு முன் நம்மவர்கள் தான்!!!


பறக்கும்கோட்டைகளைக் குறித்து ஒரு பழந்தமிழ்க் கவிஞர் பாடியுள்ளார். ஆகாயத்தில் இயங்கிய அக் கோட்டை தூங்கெயில் என்று பெயர்பெற்றிருந்தது; பறக்கும் கோட்டையில் உள்ளேயிருந்து பகைவன் நாடு நகரங்களைப் பாழாக்கினான். அப்பொல்லாப் பகைவனை ஒரு சோழ மன்னன் வென்றான்; அவன் ஊர்ந்து சென்ற ஆகாயக் கோட்டையை ஒரு படைக்கலத்தால் அடித்து ஒழித்தான். அவ் வீரனைத் தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் என்று தமிழ் நாடு போற்றிப் புகழ்ந்தது. அம் மன்னன் கையாண்ட படைக்கலம் இன்னதென்பது இப்பொழுது தெரியவில்லை.


மற்றோர் அரசன் ஒருபெரிய நாட்டை அண்டு வந்தான். தரையில் போர் செய்வதற்கு நால்வகைச் சேனையும் அவனிடம் நன்கு அமைந்திருந்தன. ஆயினும், விண்ணிலே பறந்து செல்வதற்கு விமானம் ஒன்று செய்ய பணித்தான். அவன் விரும்பியவாறு ஆகாய விமானம் ஒன்று ஏழு நாளில் ஆக்கப்பட்டது. நல்லரக்கும், மெழுகும், பல்டகிழியும், பயினும் கொண்டு பாங்குறச் செய்யப் பட்ட ஆகாய விமானத்தின் அழகு மன்னவன் மனத்தைக் கவர்ந்தது. விமானத்தை இயக்கும் பொறி வியக்கத் தக்கதாய் இருந்தது. அப் பொறியை வலப்பக்கத்தில் கை விரலால் மெல்ல அசைத்தால் விமானம் எழுந்து மேலே பறக்கும்; மேக மண்டலத்திற்கு மேலாகச் செல்லும். அப் பொறியை இடப்பக்கத்தில் அசைத்தால்விமானம் கீழே இறங்கிக் கால் குவித்துத் தரையிலே தங்கும்.


இத் தகைய மயில் விமானத்தை அம் மன்னன் முதலில் தன் மாளிகைப் பூந்தோட்த்திலே இயக்கிப் பழகினான்; எளிதாக அவ் வானவூர்தி இயங்கும் தன்மையை அறிந்து, தன் காதல் மனைவிக்கும் அதை இயக்கும் முறையைக் கற்பித்தான். விமானத்தை முறுக்கி மேலே பறக்கவும், எளிதாக இறக்கவும் கற்றுக்கொண்ட அரமாதேவி மாளிகையைச் சூழ்ந்த இடங்களிலும் புங்காவனததிலும்அதன்மீது ஏறிச் சுற்றி இன்புற்றிருந்தாள்.


நாட்டை அபரித்த அமைச்சருடன் பேராட வேண்டியதால் நிறைமாத அரசியை அந்த மயில் விசையில் ஏற்றி அனுப்ப அது சுடுகாட்டிஇறங்க அங்கோ சீவகன் பிறந்தான்.


இராவணனிடம் புட்பக விமானம் இருந்தது,

போகர் சித்தரும் விமானம் செய்து ஓட்டியிருக்கிறார்

கண்ணகியையும் வானஊர்த்தி வந்து அழைத்துச் சென்றதாம்