Wednesday, July 19, 2006
மும்பை, ஜுலை. 19-
மும்பை ரெயில்களில் கடந்த வாரம் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 200 பேர் பலியானார்கள்.
இந்த நாசவேலைக்கு லஷ்கர்-இ-ககர் எனும் புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.
மும்பை குண்டு வெடிப்பை வெற்றிகரமாக நடத்தி விட்டதாக அந்த அமைப்பு தனியார் தொலைக்காட்சிக்கு அனுப்பிய இ-மெயிலில் கூறி இருந்தது.
இ-மெயில் தகவல் முழு விவரம் வருமாறு:-
மும்பை ரெயில் குண்டு வெடிப்பை எங்கள் இயக்கம் தான் நடத்தியது. 16 பேர் குழு இதை வெற்றிகரமாக செய்து முடித்தது. இதில் 15 பேர் தப்பி விட்டனர். ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.
குண்டு வெடிப்பை நாங்கள்தான் நடத்தினோம் என்பதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களாக அவை வெளியிடப்படும்.
ரெயில்களில் குண்டு வைத்து விட்டு தப்பிய 15 தற்கொலை படையினரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். வெற்றியை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
15 பேரையும் மீண்டும் ஒருங்கிணைப்போம். அதன் பிறகு டெல்லி, மும்பை நகரங்களில் மீண்டும் வெடி குண்டு தாக்குதல்கள் நடத் தப்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங் களை குறி வைத்து தாக்குதல் நடத்துவோம்.
இந்த சமயத்தில் முஸ்லிம் சகோதர-சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். டெல்லி, மும்பையில் உள்ள முக்கிய வரலாற்று சின்னங்கள், அரசு கட்டிடங்களுக்கு செல்லாதீர்கள். எந்த நேரத் திலும் குண்டுகள் வெடிக்கலாம்.
அவை உங்களை பாதித்து விடக்கூடும். எனவே ஒதுங்கியே இருங்கள்.
அடுத்த தாக்குதலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.
இவ்வாறு அந்த இ-மெயிலில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சிமி ஆதரவாளர்களை சல்லடை போட்டு தேடி விசாரித்து வந்த மும்பை போலீசாரின் கவனம், இந்த புதிய அமைப்பு மீது திரும்பியது.
அந்த அமைப்பு விடுத்த இ-மெயில் எங்கு இருந்து வந்தது என்று விசாரித்தனர். தீவிர ஆய்வுக்குப் பிறகு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து இ-மெயில் தகவல் அனுப்பப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அதை அனுப்பியது யார்? என்று கண்டு பிடிக்கும் முயற்சி களில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். தீவிர விசாரணைக்குப் பிறகு போபாலை சேர்ந்த சுமித் என்ற வாலிபர் பிடிபட்டார்.
விசாரணையில் அவர் "சும்மா ஜாலிக்காக இ-மெயில் அனுப்பினேன்'' என்றார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Tuesday, July 18, 2006
கேள்விப்பட்டேன்
இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஷியாம் சரண், சமீபத்தில் இலங்கை சென்று அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷேவைச் சந்தித்துவிட்டு வந்துள்ளார்.'இலங்கை அரசை விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்தைக்கு இணங்க வைத்து, அதிகாரப் பகிர்வின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்' என்ற இந்திய பிரதமரின் திட்டத்தைத் தெரிவிப்பதே பயண நோக்கம் என்று சொல்லப்பட்டாலும், உண்மை அது இல்லையாம். பாகிஸ்தானிடம் "வான்வெளியை கண்காணிக்கும் ராடார் வேண்டும்" என இலங்கை அரசு கேட்டிருந்ததாம். இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளில் ஒன்று சேர்வது எதிர்கால ஆபத்தாக அமையலாம் என கருதிய இந்தியா, தானே முன்வந்து ராடார்களை இலங்கைக்கு வழங்க முடிவெடுத்ததாம். இதனை முறைப்படி ஒப்படைக்வே சரண் சென்றாராம். இந்தத் தகவல் தெரிந்து, தமிழக புலி ஆதரவு தலைவர்கள் துள்ளிக் கொண்டு இருக்கிறார்களாம்.
Sunday, July 16, 2006
யார் பெற்ற பிள்ளையோ!! ஏன் நமது உறவினராகவும் இருக்கலாம் குண்டு வைத்தவனுக்கு சொந்தகாரராகவும் இருக்கலாம் இதைக் கண்ட நல்ல உள்ளங்களுக்கு உறக்கம் தான் வருமா?
செம்மறியாட்டுக் கூட்டம் இப்படித்தான் ஒருமுறை அடிபட்டு கிடந்தன அதையும் வீஞ்சிவிட்டது படுபாதகர்களின் கோரச்செயல்.
வஞ்சகரின் பசியடங்கியதா? ஆசை தீந்ததா?






குண்டு வைத்தவனின் அண்ணன் தம்பிகள் இப்படி இருந்தால் அவன் என்ன செய்வான்? அழுவானா? வெற்றி பெற்றோம் என மகிழ்வானா?
அவன் என்ன செய்தால் என்ன நடக்கக் கூடாதது நடந்து விட்டது.
இனி இவ்வாறு நடக்காமல் பார்பது நமது கடமையும் அரசின் கடமையுமாகும்
படங்கள் மாலை மலர்