துன்பத்திற்குப் பிறப்பிடம் எது?
இன்பத்திற்கு அழிவிடம் எது?
தோல்விக்குப் பிறப்பிடம் எது?
வெற்றிக்கு அழிவிடம் எது?
தீமைக்குப் பிறப்பிடம் எது?
நன்மைக்கு அழிவிடம் எது?
வறுமைக்குப் பிறப்பிடம் எது?
வாழ்வுக்கு அழிவிடம் எது?
சோம்பல்
Saturday, August 05, 2006
Friday, August 04, 2006
சிந்தனை
ஓயாது பேசிக் கொண்டிருப்பவன் தன் உள்ளத்தில் ஒன்றுமில்லையென்பதைத் காட்டிக் கொள்கிறான்.
ஒன்றுமே பேசாதிருப்பவன் தன்னுள்ளத்தில் எதையோ மறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் காட்டிவிடுகிறான்.
முன்னவனை ஓட்டைவாயன் என்றும் ;பின்னவனை அறிஞன் என்றும் கூறுகிறவன் தன் அவசரப் புத்தியைக் காட்டிக் கொள்ளுகிறான்.
முன்னவனை நல்லவன் என்றும் பின்னவனை வஞ்சகன் என்றும் கூறுகிறவன் அவனைவிட அவரசக்காரன் என்பதைக் காட்டிக் கொள்ளுகிறான்.
இந்நால்வரும் சிந்தனைச், செல்வத்தை இழந்துவிட்டவர் என்பது அறிஞரின் முடிவு.

காந்தியடிகள் செய்த தவறு
நாட்டிலே கல்வியை வளர்க்கும் முன்னே,
மக்கள் அரசியலை அறியும் முன்னே,
நாடாள்வதற்கு நல்ல மனிதர்களை உண்டாக்குவதற்கும் முன்னே,
சுதந்திரத்தைப் பாடுபட்டுப் பெற்றது தான்காந்தியடிக்ள செய்த தவறு.

Wednesday, August 02, 2006
குண்டு வெடிப்பிற்கு பண உதவி
மும்பை குண்டு வெடிப்பிற்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி
மும்பை : மும்பை குண்டு வெடிப்பில் வெளிநாட்டிலிருந்து பண உதவி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மும்பையில் ரயில் நிலையங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 200 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் 6 மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் சவுதிஅரேபியாவில் உள்ளவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பண உதவி பெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தினமலர் செய்தி

Sunday, July 30, 2006
நெஞ்சை உறைய வைக்கும் செய்தி
இன்னைய தினமலரில்
புதுடில்லி : சிறுவர்களை கடத்தி அவர்களின் உறுப்புகளை ஊனமனாக்கி விற்கும் கும்பல் குறித்த தகவல்கள் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெருவோரமாக அநாதையாக இருக்கும் சிறுவர்களை கடத்தி, அவர்களது கை, கால் போன்ற உடல் உறுப்புகளை ஊனமாக்கி அவர்களை பிச்சையெடுக்க விட்டு விடும் மாபியா கும்பல் குறித்த தகவல்களை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.
இந்த மாபியா கும்பலுடன் இணைந்து சில மருத்துவமனைகளும் இயங்கி வந்தன. இதனை செய்வதற்காக மருத்துவர்கள் 10ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். இது குறித்து 24 மணி நேரத்தில் விரைவில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவார்கள் என இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களது மருத்துவ உரிமமும் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய உத்திரபிரதேசத்தைச் சார்ந்த மற்றொரு மருத்துவர் அஜய் அகர்வால் தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை விரைவில் கைது செய்யும்படி உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இன்னும் 2 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக டில்லியைச் சார்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் படம் பிடித்துக் காட்டிய மருத்துவர் பன்சால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Subscribe to:
Posts (Atom)