Wednesday, August 16, 2006

காளமேகத்தின் காமெடி

நாகப்பட்டினத்தில் காத்தான் என்பவர் அன்னசத்திரம் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரம் சத்திரத்தினுள் சென்றார். சத்திரத்து நிர்வாகி அவரை வரவேற்று அமரச் செய்தார். "கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்" என்று வாசல் திண்ணையில் அமர வைத்தார். அநத காலங்களில் வீட்டுக்கு வீடு திண்ணை கட்டிதான் வீடு கட்ட வேண்டும் சோழனின் ஆணை வழபோக்கர்கள் தங்க. காளமேகமும் தன்னைப் போல் சாப்பாட்டுக்கு வந்திருந்தோருடன் அமர்ந்தார்.

ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் சாப்பாடு போட வில்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. சிறு குடலை பெரு குடல் மேய்கிறது பொறுமை இழந்து அப்பனே நீ சாப்பாடு போடுவதற்கு என் உயிர் போகும் போல இருக்கு என்றார் ,நிர்வாகி "இதோ ஆயிற்று; கொஞ்சம் பொறுங்கள்" என்று அமைதிப் படுத்தினார். அவருக்கு வந்திருப்பவர் காளமேகம் என்று தெரியாது. நடுநிசியும் ஆயிற்று. சாப்பாடு தாயாராகவில்லை.புலவருக்குப் பசி அதிகமாகி கோபம் சீறிக் கொண்டு வந்தது. நிர்வாகியைக் கூப்பிட்டார். அதற்குள் அவரே அவரைச் சாப்பிட அழைத்தார். காளமேகம் "என்னய்யா சத்திரம் நடத்துகிறீர்கள்? சாப்பிட வந்தவன் என்றால் அவ்வளவு இளக்காரமா?" என்று கத்தினான். நிர்வாகி "கொஞ்சம் தாமதம் தான் ஆகிவிட்டது. மன்னிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். "கொஞ்சமா? பொழுது விடிந்து விடும் போல இருக்கிறதே!" என்று கோபப் பட்டு ஒரு பாடல் பாடினார்.

கத்துக்கடல் நாகைக்
காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில்
அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்;
ஓரகப்பை அன்னம்

இலையில் இட வெள்ளி எழும்.

என்று பாடினார்

அலை சத்தம் மிடும் கடல்சூழ்ந்த நாகைப் பட்டினத்துக் 'காத்தான்' என்பவனது சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்தான் சமைப்பதற்கு அரிசி வந்திறங்கும்; அரிசியைக் களைந்து உலையிலே இடும்போதோ ஊர் அரவம் அடங்கி நள்ளிரவு ஆகிவிடும். சோறு தயாராகி, வந்தவர்க்கு ஒரு அகப்பைச் சோற்றை இலையில் இடும்போது வெள்ளி நட்சத்திரம் தோன்றுகிற விடியற்காலம் தோன்றிவிடும்.

இந்தப் பாடலலைக் கேட்ட நிர்வாகி பயந்துபோய் சத்திரத்து முதலாளி காத்தானிடம் ஓடி போய் அழைத்து வந்தார். காத்தானுக்கு வந்திருப்பது கவி காளமேகம் என்று தெரிந்து விட்டது. காளமேகத்திம் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்; தயவு செய்து மாற்றிப் பாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்குள் சாப்பிட்டுப் பசி தணிந்த நிலையில் காளமேகம் காத்தானின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தான். "மாற்றிப் பாட வேண்டியதில்லை; இதையே பாராட்டாகக் கொள்ளலாம்" என்று சொல்லி அவரே அந்தப் பாடலை மறுபடியும் பாடி வேறு பொருள் சொன்னான்.

'
காத்தானது சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் - அதாவது பஞ்ச காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். ஊரே அங்கு இடும் உணவை உண்டு பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போலப் பளீரென்று வெண்மையாக இருக்கும்'.

என்று பதில் சொன்னார்

(குடந்தையில் சோழியப் பார்ப்பனன் ஒருவன் தான்
உண்டுகொண்டிருந்த இலையில் அவிழ்ந்து விழும் தன் குடுமியை
எடுத்து உதறியபோத அதனின்றும் எச்சில் சோறானது
காளமேகப் புலவரது இலையில் வந்து விழக்கண்டு அது
குறித்துச் சினமுற்று பாடியது)

சுருக்குஅவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்
பொருக்குஉலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்
கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்!

என்று பாடுகிறார்

சிவன் பெருமாள் காளமேகம்

ஒரு நாள் காளமேக புலவர் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தார். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தார். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவர் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளாரே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், "எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்" என்றனர்.

காளமேகம் பார்த்தார். "சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ..." என்று சொல்லி "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்" என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவரை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, "என்ன சொன்னேன்.? என் கடவு¨ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்" என்று சொல்லி நிறுத்தினார். வைணவர்கள் திகைத்து "அதெப்படி?" என்றார்கள். "ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொலையாதே" என்று புதிரை விடுவித்தார்.

'
சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?' என்று விளக்கம் சொன்னார்

கன்னபுர மாலே
கடவுளிலும் நீ அதிகம்
உன்னை விட நான்
அதிகம்- ஒன்று கேள்
உன் பிறப்போ பத்தாம்
உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை
என் பிறப்போ
எண்ணத் தொலயாதே.

Monday, August 14, 2006

தேவரும் சமீன் ஒழிப்பும்



சமயத்திற்கும், பிற்பட்ட சமுதாய மேம்பாட்டிற்கும் பெருந்தொண்டாற்றி வந்த திரு. தேவர் அவர்கள், தானாண்மை மிளிர்ந்த வேளாண்மைக் குடியினர்கள் மேம்பாட்டுக்கும் உழைக்க உறுதி கொண்டார்.

திருச்சுழி - பாக்குவெட்டி - தவசிக்குறிச்சி - செய்யாமங்கலம் - கீழராமந்தி - கறிக்கோட்டம் - நகரத்தார் குறிச்சி - மேலராமந்தி - சேம்பக்குளம் முதலிய 32 கிராமங்களில் ஆயிரக்கணக்கான நன்செய், புன்செய் நிலங்களுக்குரிய ஒரு மாபெரும் பட்டாதாரி பெரும் நிழக்கிழார், இராமநாதபுரம் சமீனுக்குட்பட்டவர் பசும்பொன் தேவர் அவர்கள் (ஏர்உழவர்களாகியமறவர் மக்கள் 50, 100, 1000, வேலி நன்செய், புன்செய் நிலங்களுக்குரிய பட்டாதாரியாக இருந்தவர். 63.7 விழுக்காடு விவசாயிகளாக இருந்தனவர் 1951 ம் ஆண்டுஇந்திய மக்கள் கணக்கெடுப்பு. இராநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி குறிப்பு)

தமக்கு உரித்தாக இருந்த பெரும்பாலான நிலங்களை எல்லாம் ஏழை, எளிய அரிசனங்களுக்கு இலவசமாகவே கொடுத்தவர், சனநாயக சமத்துவ கொள்கையை முதன் முதலாக அமுல்படுத்திய அடலேறு தேவர் அவர்கள்.

சமீன்தார்களின் ஆட்சியுரிமைக்குட்பட்டிருந்த வேளாண்மைப் பெரு மக்களின் அவல நிலையைப் போக்கவும். அவர்கது துயர் துடைக்கவும் உறுதி கொண்டெழுந்தார். வெள்ளையர் தந்த வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கும் வளையாத நெஞ்சுடைய வண்டமிழர் தளபதி அல்லவா அவர்!

"
தமிழ்நாடு சமீன் ஒழிப்புச் சங்கம்" நிறுவினார், விவசாய பெருங்குடி மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி உண்டாயிற்று. நாடெங்கும் சென்று தேவர் அவர்கள் தமது கொள்கையை எடுத்துரைத்தார், வீரமும், விவேகமும் சுரந்து நிற்கும் தேவர் அவர்களது துடிப்புரைகள், துணிச்சலான பேச்சு, எவரும் எதிர்க்க முடியாத அளவிற்கு ஒரு சக்திவாய்ந்த செயலாகியது. ஆதரவு பெருகியது மக்களிடம். உழைக்கும் கைகள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒலிக்கத் தொடங்கியது. "சமீன் ஒழிக" என்ற கிளர்ச்சி எழுந்தது. காங்கிரசு தேர்தல்வக்குறுதியிலும் வெற்றி பெற்றால் சமீன்ஒழிப்புச் சட்டம் செய்யப்படும் என்ற வாக்குறுதியும் கொடுத்திருந்தது. திரு. பிரகாசம் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சமீன்தார்கள் சார்பாக மிர்சாபூர் சமீன்தார் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார். இறுதியில் சமீன் ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்ப்டது.

தமது செல்வ நிலைக்கும், செல்வாக்கிற்கும் குறுநில மன்னராக இருக்க வேண்டிய செருக்கு இல்லாத தேவர் அவர்கள் தமிழ்க் குலத்திற்கே ஒரு விலை மதிப்பீடல்லா மாணிக்கமாகும்.

1949
ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7 ஆம் நாள் சட்டம் நிறைவேறியது. வேளாண்மைப் பெருங்குடி மக்கள் வாழ்வு மலர்ந்தது.