
சமயத்திற்கும், பிற்பட்ட சமுதாய மேம்பாட்டிற்கும் பெருந்தொண்டாற்றி வந்த திரு. தேவர் அவர்கள், தானாண்மை மிளிர்ந்த வேளாண்மைக் குடியினர்கள் மேம்பாட்டுக்கும் உழைக்க உறுதி கொண்டார்.
திருச்சுழி - பாக்குவெட்டி - தவசிக்குறிச்சி - செய்யாமங்கலம் - கீழராமந்தி - கறிக்கோட்டம் - நகரத்தார் குறிச்சி - மேலராமந்தி - சேம்பக்குளம் முதலிய 32 கிராமங்களில் ஆயிரக்கணக்கான நன்செய், புன்செய் நிலங்களுக்குரிய ஒரு மாபெரும் பட்டாதாரி பெரும் நிழக்கிழார், இராமநாதபுரம் சமீனுக்குட்பட்டவர் பசும்பொன் தேவர் அவர்கள் (ஏர்உழவர்களாகியமறவர் மக்கள் 50, 100, 1000, வேலி நன்செய், புன்செய் நிலங்களுக்குரிய பட்டாதாரியாக இருந்தவர். 63.7 விழுக்காடு விவசாயிகளாக இருந்தனவர் 1951 ம் ஆண்டுஇந்திய மக்கள் கணக்கெடுப்பு. இராநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி குறிப்பு)
தமக்கு உரித்தாக இருந்த பெரும்பாலான நிலங்களை எல்லாம் ஏழை, எளிய அரிசனங்களுக்கு இலவசமாகவே கொடுத்தவர், சனநாயக சமத்துவ கொள்கையை முதன் முதலாக அமுல்படுத்திய அடலேறு தேவர் அவர்கள்.
சமீன்தார்களின் ஆட்சியுரிமைக்குட்பட்டிருந்த வேளாண்மைப் பெரு மக்களின் அவல நிலையைப் போக்கவும். அவர்கது துயர் துடைக்கவும் உறுதி கொண்டெழுந்தார். வெள்ளையர் தந்த வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கும் வளையாத நெஞ்சுடைய வண்டமிழர் தளபதி அல்லவா அவர்!
"தமிழ்நாடு சமீன் ஒழிப்புச் சங்கம்" நிறுவினார், விவசாய பெருங்குடி மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி உண்டாயிற்று. நாடெங்கும் சென்று தேவர் அவர்கள் தமது கொள்கையை எடுத்துரைத்தார், வீரமும், விவேகமும் சுரந்து நிற்கும் தேவர் அவர்களது துடிப்புரைகள், துணிச்சலான பேச்சு, எவரும் எதிர்க்க முடியாத அளவிற்கு ஒரு சக்திவாய்ந்த செயலாகியது. ஆதரவு பெருகியது மக்களிடம். உழைக்கும் கைகள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒலிக்கத் தொடங்கியது. "சமீன் ஒழிக" என்ற கிளர்ச்சி எழுந்தது. காங்கிரசு தேர்தல்வக்குறுதியிலும் வெற்றி பெற்றால் சமீன்ஒழிப்புச் சட்டம் செய்யப்படும் என்ற வாக்குறுதியும் கொடுத்திருந்தது. திரு. பிரகாசம் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சமீன்தார்கள் சார்பாக மிர்சாபூர் சமீன்தார் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார். இறுதியில் சமீன் ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்ப்டது.
தமது செல்வ நிலைக்கும், செல்வாக்கிற்கும் குறுநில மன்னராக இருக்க வேண்டிய செருக்கு இல்லாத தேவர் அவர்கள் தமிழ்க் குலத்திற்கே ஒரு விலை மதிப்பீடல்லா மாணிக்கமாகும்.
1949 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7 ஆம் நாள் சட்டம் நிறைவேறியது. வேளாண்மைப் பெருங்குடி மக்கள் வாழ்வு மலர்ந்தது.
No comments:
Post a Comment