ஒரு நாள் காளமேக புலவர் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தார். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தார். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவர் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளாரே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், "எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்" என்றனர்.
காளமேகம் பார்த்தார். "சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ..." என்று சொல்லி "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்" என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவரை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, "என்ன சொன்னேன்.? என் கடவு¨ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்" என்று சொல்லி நிறுத்தினார். வைணவர்கள் திகைத்து "அதெப்படி?" என்றார்கள். "ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொலையாதே" என்று புதிரை விடுவித்தார்.
'சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?' என்று விளக்கம் சொன்னார்
உன் பிறப்போ பத்தாம்
உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை
என் பிறப்போ
8 comments:
அன்பு ரெத்தினவேல் அண்ணா!
எனக்குப் பழந்தமிழ் இலக்கியப்பாடல்கள் பிடிக்கும்; உங்கள் பதிவு கண்டு மகிழ்ந்தேன்; அடிக்கடி காளமேகப் புலவர் பாடல் போடவும். அத்துடன் " சொல்லாமல் பெரியர் சொல்லிச் செய்வார் சிறியர் ,சொல்லியும் செய்யார் கயவர்;;;என வரும் பாடலைப் போட்டுப் பொருள்தரவும். அத்துடன் காடுகளில் பெண்களைக் கண்டால் குரங்குகள் பார்க்குமாம்!!! காரணம் ;சலவைக்காரர் சொல் கேட்டு; சீதையை காட்டில் விட்டது போல் இப் பெண்ணையும் யாராவது விட்டு விட்டார்களா?? என்ற எண்ணமாம்; இதைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பாடல் "வண்ணான் மொழி கேட்டு " எனத் தொடங்கும் அதையும் தெரிந்தால் பொருளுடன் தரவும்.
யோகன் பாரிஸ்

நண்பர் ஜோன் பாரிஸ் வாருங்கள்
தங்களது இத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன்.
யோஹன் பாரிஸ் வைக்கும் கோரிக்கை தான் எனக்கும்.
காளமேகப் புலவர் பாடிய சிலேடைகள் எத்தனையொ இருக்கும்.
இன்னும் எத்தனையொ அவ்வையார் பாடல்கள்,--இல்லாள் சற்றூ ஏறக்குறைய இருந்தால் கூறாமல் சன்னியாசம் கொள்// என்ற பாட்டு எப்போதோ கேட்டது.
உங்கள் பதிவில் பார்த்தால்
உதவியாக இருக்கும்.
பதிவிடுகிறேன்
என்னார்!
இல்லாள் சற்று அப்படி இப்படி இருந்தால் சன்னியாசம் கொள் எனும் கருத்துடைய பாடல்
"பத்தாவுக் கேற்ற பதிவிரதையானால்
எக்காலும் கூடி வாழலாம்- சற்று
ஏறுமாறாக நடப்பாளெ யானால்
கூறாமல் சன்னியாசம் கொள்!....இப்படிப் படித்த தாக ஞாபகம்.
யோகன் பாரிஸ்
நல்ல கதை. நல்ல பாடல். இதுவரை நான் படிக்காதது. மிக்க நன்றி என்னார் ஐயா. :-)
குமரன் நன்றி
Post a Comment