இன்னைய தினமலரில்
புதுடில்லி : சிறுவர்களை கடத்தி அவர்களின் உறுப்புகளை ஊனமனாக்கி விற்கும் கும்பல் குறித்த தகவல்கள் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெருவோரமாக அநாதையாக இருக்கும் சிறுவர்களை கடத்தி, அவர்களது கை, கால் போன்ற உடல் உறுப்புகளை ஊனமாக்கி அவர்களை பிச்சையெடுக்க விட்டு விடும் மாபியா கும்பல் குறித்த தகவல்களை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.
இந்த மாபியா கும்பலுடன் இணைந்து சில மருத்துவமனைகளும் இயங்கி வந்தன. இதனை செய்வதற்காக மருத்துவர்கள் 10ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். இது குறித்து 24 மணி நேரத்தில் விரைவில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவார்கள் என இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களது மருத்துவ உரிமமும் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய உத்திரபிரதேசத்தைச் சார்ந்த மற்றொரு மருத்துவர் அஜய் அகர்வால் தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை விரைவில் கைது செய்யும்படி உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இன்னும் 2 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக டில்லியைச் சார்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் படம் பிடித்துக் காட்டிய மருத்துவர் பன்சால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment