மும்பை குண்டு வெடிப்பிற்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி
மும்பை : மும்பை குண்டு வெடிப்பில் வெளிநாட்டிலிருந்து பண உதவி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மும்பையில் ரயில் நிலையங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 200 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் 6 மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் சவுதிஅரேபியாவில் உள்ளவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பண உதவி பெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தினமலர் செய்தி
No comments:
Post a Comment