Friday, August 04, 2006

காந்தியடிகள் செய்த தவறு

நாட்டிலே கல்வியை வளர்க்கும் முன்னே,
மக்கள் அரசியலை அறியும் முன்னே,
நாடாள்வதற்கு நல்ல மனிதர்களை உண்டாக்குவதற்கும் முன்னே,
சுதந்திரத்தைப் பாடுபட்டுப் பெற்றது தான்காந்தியடிக்ள செய்த தவறு.

8 comments:

நாமக்கல் சிபி said...

உண்மைதான் என்னார் அவர்களே!

இல்லாவிடில் இப்போதுள்ள நாற்காலிச் சண்டைகள் இல்லாதிருந்திருக்கும்!

//மக்கள் அரசியலை அறியும் முன்னே//

வாக்களிப்பதோடு நின்றுவிடாமல், சமூக வளர்ச்சியில் தங்களுக்கும் உள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகளை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

(மன்னிக்கவும், பதிவை விட பின்னூட்டம் பெரிதாகி விட்டது :)
)

ENNAR said...

நன்றி சிபி
அதாவது மக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

PKS said...

Ennar,

Please bear with my English. Gandhi has postponed (i mean, kai vitaar) three times his movements saying the same reason - that people are not ready for freedom. If I dig up my memory I could come up with exact instances. So I am surprised that you say, Gandhi did not know it.

ஓகை said...

வெள்ளையன் வருவதற்கு முன்னே நாம் சரியாகத்தான் இருந்திருக்கிறோம். பதினேழாம் நூற்றாண்டில் பாரதத்தை உலக நாடுகளோடு ஒப்பிட்டால் அப்படித்தான் தெரிகிறது. பீடை பிடித்ததால் பீடு இழந்தோம். அவர் நம் பிணி விலக்கினாலும் பிணியின் பாதிப்பு இன்னும் போகவில்லை.

ENNAR said...

ஓகை
தங்கள் சொல்வது இல்லை இல்லை இல்லவே இல்லை நான் தற்போது தொகுத்துக் கொண்டு உள்ளேன் வெள்ளையர் வரவில்லை யென்றால் நாம் எங்கோ போயிருப்போம் பலர் அழிந்திருப்பர் அந்த கொடிய நச்சுப்பாம்பிடம் கடிபட்டிருப்போம் எனது தொகுப்பு கூடிய சீக்கிரம் வரும் . வெள்ளையன் வந்தது நல்லது நாட்டுக்கும் நமக்கும் .

ENNAR said...

நன்றி நண்பரே சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டது காவிரி தண்ணீர் நம்ம ஊருக்கு வந்து விட்டாதா குறுவை சாகுபடி தொடங்கியாச்சா. கூட்டுறவு சங்க கடண் தள்ளபடி தங்கள் குடும்பத்திற்கு கிட்டியதா?

இரா.சுகுமாரன் said...

//சுதந்திரத்தைப் பாடுபட்டுப் பெற்றது தான்காந்தியடிக்ள செய்த தவறு.//

காந்தி எங்கையா சுதந்திரம் வாங்கித் தந்தார். சிப்பாய் கலகம் வேலூரில் தொடங்கிய போது அதனை கண்டித்தார்.
அதுதான் முதல் சுதந்திரப்போர் எனப்பட்டது.

அதைத்தான் கண்டித்து என்ன சொன்னார் தெரியுமா?.
உயர் அதிகாரிகளுக்கு பணிந்து நடக்க வேண்டுமாம். ............

இந்திய தேசிய காங்கிரசு ஒரு வெள்ளையனால் தொடங்கப்பட்டது என்பதில் பொருமகிழ்ச்சி அடைவதாக புளகாங்கிதம் அடைந்தார் காந்தி.

ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூட்டை காந்தி கண்டிக்கவே இல்லை.
துப்பாக்கியால் மக்களை வெள்ளையன் சுட்டு கொன்றபோது, கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்று பேசி வெள்ளையனின் வெறித் தாக்குதலுக்கு போராளிகளை காவு கொடுத்தார்.

இப்படி "இந்திய விடுதலையில் காந்தியின் துரோகம்" அளப்பறியது.

ENNAR said...

//காந்தி எங்கையா சுதந்திரம் வாங்கித் தந்தார். சிப்பாய் கலகம் வேலூரில் தொடங்கிய போது அதனை கண்டித்தார்.
அதுதான் முதல் சுதந்திரப்போர் எனப்பட்டது. //
அவர் தலைமையில் தான் நாம் சுதந்திரம் பெற்றோம் அதை மறுக்க முடியாது.
ஆயுதம் எடுத்து போராடினால் நம்மவர்கள் தான் அதிகம் மாண்டுபோவார்கள் என சாத்வீகமாக போராடச் சொன்னார்.
அவர் சொல்லிக்கொடுத்ததை நடைமுறைபடுத்திப் பாருங்கள். எனது அனுபவத்திலும் உண்டு.
சாலையில் போகயில் ஒரு முரடன் ஓரம் போ என்றால் நாமும் பேசாமல் ஒதுங்கிப் போக வேண்டும் எதிர்த்துக் கேட்டால் அடுத்து நம் மரியாதை குறையும் "போட பேமாளி என்பான்". இது தேவையா?
அமைதியாகப் போய்விடுங்கள் சில நாட்களித்து அவனே நம்மிடம்வந்து ஐயா என கெஞ்சவான் எனது அனுபவத்தில் நான் கண்டது.
விடுதலைக்கு முதன் முதல் போராடியவர்கள்.
http://velu.blogsome.com/2006/02/07/poolidevan/