சென்னை கொடுங்கைïரில் கடந்த 2002ம் ஆண்டு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 12 தீவிர வாதிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்த அதிரடி வேட்டையின்போது இம்ரான் (வயது30) என்பவன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டான்.
போலீசார் நடத்திய விசாரணையில் தமிழக முஸ்லிம் தீவிராத அமைப்புக்கு இம் ரான் தலைவனாக செயல் பட்டவன் என்பது தெரிய வந்தது. அதோட அவன் சவுதி அரேபியா சென்று அங்குள்ள "முஸ்லிம் பாதுகாப்பு படை'' எனும் அமைப்பிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவன் என்பதும் தெரிய வந்தது.
முஸ்லிம் பாதுகாப்பு படையின் தலைவர்களான அபுஹம்சா, அபுஉமர் ஆகிய இருவரிடமும் இம்ரான் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நாசவேலை செய்ய ஆட்களை திரட்டி அவர்களுக்கு பயிற்சி கொடுக் கும் பொறுப்பை இம்ரான் ஏற்றிருப்பதையும் போலீ சார் கண்டு பிடித்தனர். எனவே தமிழக போலீசாருக்கு தீவிரவாதி இம்ரான் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.
இம்ரான் எந்த நேரத்திலும், தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் உளவுத்துறையிடம் இருந்து கொண்டே இருந்தது. எனவே இம்ரானை பிடிக்க பல கோணங்களில் வலை விரிக்கப்பட்டது. அவனது நடமாட்டங்கள் கண்காணிக் கப்பட்டன.
நெல்லை, தஞ்சை, கோவை மாவட்டங்களில் அவன் அடிக்கடி பதுங்குவதும், கேரள மாநிலத்துக்கு சென்று வருவதும் கண்டு பிடிக்கப்பட்டது. தமிழ் நாட்டுக்குள் வரும்போது அவனை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் கடந்த 4 ஆண்டுகளாக அவன் போலீசாருக்கு "டிமிக்கி'' கொடுத்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சி.பி.சி.ஐ.டி. புலனாய்வுத் துறை போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. தீவிரவாதி இம்ரான் திருச்சியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவலில் தெரிவிக்கப்பட்டது. இந்த தடவை தீவிரவாதி இம்ரானை கோட்டை விட்டு விடக்கூடாது என்று போலீசார் ரகசிய விïகம் வகுத்தனர்.
சிறப்பு புலனாய்வுத்துறை சூப்பிரண்டு வினீத்முகுல் வான்கடே உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பால்வண் னான் தலைமையில் ஒரு தனிப்படை திருச்சி விரைந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இம்ரானை அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். உடனடியாக அவன் சென்னை கொண்டு வரப்பட்டான்.
இன்று காலை தீவிரவாதி இம்ரானை எழும்பூர் 10- வது மாஜிஸ்திரேட் கோர்ட் டில் போலீசார் ஆஜர்படுத் தினார்கள். அவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அவன் தொடர்பான தகவல் களை கேட்ட போது சிறப்பு புலனாய்வுத் துறை போலீசார் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர். தீவிரவாதி இம்ரான் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.
தீவிரவாதி இம்ரானின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினம். இவனது தந்தை யெர் அப்துல் காதர். வெளிநாட்டு முஸ்லிம் களால் மூளைச் சலவை செய்யப்பட்டதால் இம்ரான் தீவிர வாதி ஆகிவிட்டான்.
சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம் பாதுகாப்பு படையினர் அளித்த துர்போதனையால் சொந்த நாட்டிலேயே குண்டு கலாச்சாரத்தை வளர்த்தவன். நிறைய பேருக்கு இவன் தமிழ்நாட்டில் ஆயுதப்பயிற்சி கொடுத்து இருக்கிறான்.
தலைமறைவாக இருந்த கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் மனதை இவன் கெடுத்து தீவிராதி ஆக்கி இருக்கலாம் என்று சிறப்பு புலனாய்வு போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக இம்ரானிடம் முழு அளவில் விசாரிக்க அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இம்ரான் கைதாகி இருப்பதன் மூலம் நாசவேலை திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
080806
மாலைமலர்
2 comments:
காவல் துறையினரின் வெற்றிகரமான முயற்சிகளை பத்திரிக்கைகள் நன்கு வெளிகொணர்வதில்லை.
வாருங்கள் பாலசந்தர்
நன்றி
வருகிறதே இதுவும் பத்திரிக்கை செய்திதானே
Post a Comment