Thursday, August 10, 2006

நிர்வாண கொள்ளையர்கள் அட்டகாசம்

தினமலர் செய்தி

திருப்பத்துõர்: திருப்பத்துõரில் வீடுகளில் புகுந்து 25 பவுன் நகைகளை நிர்வாண கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்களின் ஒருவனை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.

திருப்பத்துõர் அருகே மருத்துவர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் வீட்டில் துõங்கி கொண்டிருந்தார். அதிகாலை 2 மணிக்கு இவர் வீட்டுக்கு புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தனர்.

கொள்ளையர்களைப் பார்த்ததும் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளையர்கள் அனைவரும் நிர்வாணமாக இருந்தனர். கொள்ளையர்கள், ஆறுமுகத்தின் மனைவி சுகுணாவிடம் "நகை, பணத்தை கொடுக்காவிட்டால் கற்பழித்து விடுவோம்' என மிரட்டி அவர் அணிந்திருந்த நகையை பறித்துச் சென்றனர்.

பின் அருகில் இருந்த ஜெயராமன் வீட்டுக்குச் சென்ற நிர்வாணக் கொள்ளையர்கள், அவரது மனைவி விசாலாட்சியை மிரட்டி அவர் போட்டிருந்த தாலி செயினை பறித்து சென்றனர். இதே போல அந்த பகுதியில் மாரியப்பன், உஷா உ<ட்பட>

அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசம் செய்ததால் அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். ஒரு கட்டத்தில் பொது மக்கள் நிர்வாண கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். இதில் பயந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பொது மக்கள் விரட்டி சென்று கொள்ளையர்களின் ஒருவனை பிடித்தனர்.

பிடிபட்ட கொள்ளையன் அதே பகுதியைச் சேர்ந்த பால்காரர் சேகர் (34) என்பது தெரிந்தது. இது குறித்து தகவலறிந்த திருப்பத்துõர் தாலுகா போலீசார் விரைந்து வந்து சேகரை கைது செய்தனர்.

நிர்வாணக் கொள்ளையர்களை பார்ப்பதற்கே அருவறுப்பாக இருந்தது. கற்பழித்து விடுவதாக மிரட்டியதால் வேறு வழியின்றி நகைகளை கழட்டி கொடுத்து விட்டதாக நகைகளை பறிகொடுத்த பெண்கள் தெரிவித்தனர்.

தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி., அசோக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்.
கொள்ளையடிப்பதில் இப்படி ஒரு முறை

5 comments:

நாகராஜ் said...

பாவம் அப்பாவி மக்களுக்குக்காக

அழுவதா பரிதாபப்படுவதா!!!என தெரியவில்லை

வேலையில்லா திண்டாட்டம் மக்களை இப்படிக்கூட கையேந்த வைக்குது

கதிர் said...

பின்ன இப்படி வந்தா யார்தான் பயப்பட மாட்டாங்க?

ENNAR said...

குமரன்
வேலையில்லாமல் இல்லை உடல் நோகாமல் அதிகமாக சம்பாதிக்க ஆசை

Muse (# 01429798200730556938) said...

ஒருவேளை ட்ரெஸ் வாங்க திருடியிருப்பார்களோ?

ENNAR said...

மூஸ்
அப்படியும் இருக்கலாம் சரி யாருக்கு ட்ரெஸ்